ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சுவிட்சர்லாந்து வீராங்கனை சாம்பியன்
இறுதிப்போட்டியில் பெலிண்டா பென்கிக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார்.;
கோப்புப்படம்
டோக்கியோ,
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெலிண்டா பென்கிக் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.