கொரியா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அலெக்சாண்ட்ரோவா
கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
சியோல்,
கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 11-ம் நிலை வீராங்கனையான எகதெரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷியா), கேத்ரினா சினியகோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அலெக்சாண்ட்ரோவா 6-4, 6-2 என்ற நேர் செட்டில் கேத்ரினா சினியகோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.