கொரியா ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
சியோல்,
கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், விம்பிள்டன் சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), 46-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயின்டை எதிர்கொண்டார்.
1 மணி 6 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஸ்வியாடெக் 6-0, 6-2 என்ற நேர் செட்டில் மாயாவை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.