மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற சபலென்காவுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..?
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.;
image courtesy:twitter/@MiamiOpen
மியாமி,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்த மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வீழ்த்தி அரினா சபலென்கா (பெலாரஸ்) சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
சாம்பியன் பட்டம் வென்ற அரினா சபலென்காவுக்கு இந்திய மதிப்பில் ரூ.9.5 கோடியும், 2-வது இடத்தை பிடித்த பெகுலாவுக்கு ரூ.5.25 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.