மியாமி ஓபன் டென்னிஸ்; மேட்டியோ பெரெட்டினி காலிறுதிக்கு முன்னற்றம்
மேட்டியோ பெரெட்டினி, ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினர் உடன் மோதினார்.;
மியாமி,
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி, ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினர் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய மேட்டியோ பெரெட்டினி,6-3, 7(9)-6(7) என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.