பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் தோல்வி கண்ட அலெக்சாண்டர் பப்ளிக்

பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.;

Update:2025-11-02 11:11 IST

கோப்புப்படம் 

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான அலெக்சாண்டர் பப்ளிக் (கஜகஸ்தான்) - பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் (கனடா) ஆகியோர் மோதினர்.

இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்சாண்டர் பப்ளிக், யாரும் எதிர்பார்க்கா வண்ணம் 6-7 (3-7), 4-6 என்ற செட் கணக்கில் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்