குயின்ஸ் கிளப் டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி கண்ட ரைபகினா

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.;

Update:2025-06-14 12:00 IST

கோப்புப்படம் 

லண்டன்,

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஜெர்மனியின் டாட்ஜானா மரியா உடன் மோதினார்.

இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்றும் அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரைபகினா, யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 4-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் டாட்ஜானா மரியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்