குயின்ஸ் கிளப் டென்னிஸ்: டாட்ஜானா மரியா சாம்பியன்
இறுதிப்போட்டியில் டாட்ஜானா மரியா - அமண்டா அனிசிமோவா மோதினர்.;
image courtesy:twitter/@QueensTennis
லண்டன்,
பல நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாட்ஜானா மரியா (ஜெர்மனி), அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரியா 6-3 மற்றும் 6-4 என்ற நெர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.