ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
பீஜிங்,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான டேனியல் மெத்வதேவ் (ரஷியா) - அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய மெத்வதேவ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டி மினாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.