ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் வாலண்டைன் வச்செரோட்
இறுதி ஆட்டத்தில் பிரான்சின் ஆர்தர் ரிண்டர்க்னெக் - மொனெகாஸ்கின் வாலண்டைன் வச்செரோட் உடன் மோதினார்.;
Image Courtesy: @SH_RolexMasters
பீஜிங்,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்தது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்சின் ஆர்தர் ரிண்டர்க்னெக் - மொனெகாஸ்கின் வாலண்டைன் வச்செரோட் உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வாலண்டைன் வச்செரோட் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.