சுவிஸ் ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் பப்ளிக் சாம்பியன்
இறுதிப்போட்டியில் ஜுவான் மானுவல் - பப்ளிக் மோதினர்.;
ஜிஸ்டாட்,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்ற்றிருந்த சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜுவான் மானுவல் (அர்ஜென்டினா) - அலெக்சாண்டர் பப்ளிக் (கஜகஸ்தான்) ஆகியோர் மோதினர்.
இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை பப்ளிக் கைப்பற்றி வெற்றி பெற்றார். பப்ளிக் இந்த ஆட்டத்தில் 6-4, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.