சுவிஸ் ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் பப்ளிக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது.;

Update:2025-07-19 11:25 IST

கோப்புப்படம்

ஜிஸ்டாட்,

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ கொமேசானா உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பப்ளிக் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிஸ்கோ கொமேசானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்