சுவிஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா வீரர்

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது.;

Update:2025-07-19 16:58 IST

ஜிஸ்டாட்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜுவான் மானுவல் செருண்டோலோ (அர்ஜென்டினா), இக்னாசியோ பஸ் (பெரு) பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செருண்டோலோ 6-3 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் வீரராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்