சுவிஸ் ஓபன் டென்னிஸ்: கஜகஸ்தான் வீரர் காலிறுதிக்கு முன்னேற்றம்
கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் , சக நாட்டு வீரரான ஷெவ்சென்கோ உடன் மோதினார்.;
சுவிஸ்,
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், சக நாட்டு வீரரான அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி பப்ளிக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.