சுவிஸ் ஓபன் டென்னிஸ்: பெரு வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டினாவின் ரோமன் அன்றஸ் புர்சுக்கா, பெருவின் இஞசிவ் புஸ் உடன் மோதினார்.;
கோப்புப்படம்
சுவிஸ்,
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டு ஆடி வருகின்றனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டினாவின் ரோமன் அன்றஸ் புர்சுக்கா, பெருவின் இஞசிவ் புஸ் உடன் மோதினார்.
இந்த போட்டியில் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் இஞசிவ் புஸ்ஸும், 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரோமன் அன்றஸ் புர்சுக்காவும் கைப்பற்றினர். இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.
இதில் அபாரமாக செயல்பட்ட இஞசிவ் புஸ் 6-1 என்ற புள்ளிக்கணக்கில் ரோமன் அன்றஸ் புர்சுக்காவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.