அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி

அல்காரஸ் முதல் சுற்றில் ரெய்லி ஓபெல்கா உடன் மோதினார்.;

Update:2025-08-26 14:57 IST

image courtesy: twitter/@usopen

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நட்சத்திர வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - ரெய்லி ஓபெல்கா (அமெரிக்கா) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 6-4, 7-5 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் 2-வது சுற்றில் மேட்டியா பெலூசி உடன் மோதுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்