அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது;

Update:2025-08-31 04:00 IST

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில்,கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்),  இத்தாலியின் லூசியானா டார்டெரியுடன் மோதினார் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 6-2, 6-4, 6-0 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார் . அல்காரஸ் இந்த ஆட்டத்தின் போது வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு மைதானத்தில் சிகிச்சை எடுத்தபடி தொடர்ந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்