அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் ஆன்ட்ரியா வவாசோரி ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 24-ந்தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது.;
Image Courtesy: @usopen
நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 24-ந்தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியான கலப்பு பிரிவு போட்டிகள் இந்த முறை தனியாக நடத்தப்பட்டது. இரு நாட்கள் நடந்த இந்த போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் இத்தாலியின் சாரா எர்ரானி- ஆன்ட்ரியா வவாசோரி ஜோடி, இகா ஸ்வியாடெக் (போலந்து) - கேஸ்பர் ரூட் (நார்வே) ஜோடியை எதிர்கொண்டது.
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆன்ட்ரியா வவாசோரி ஜோடி 6-3, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற ஆன்ட்ரியா வவாசோரி ஜோடி ரூ. 8¾ கோடி பரிசுத்தொகையை தட்டிச் சென்றது.