அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஆண்ட்ரி ரூப்லெவ்
ஆண்ட்ரி ரூப்லெவ் (ரஷியா ) - டினோ பிரிஸ்மிக் (குரோஷியா ) உடன் மோதினார்.;
நியூயார்க்,
'கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஆண்ட்ரி ரூப்லெவ் (ரஷியா ) - டினோ பிரிஸ்மிக் (குரோஷியா ) உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆண்ட்ரி ரூப்லெவ் 6-4,6-4,6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.