அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பாலா படோசா விலகல்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.;
கோப்புப்படம்
நியூயார்க்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் 27 வயது ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் தோல்வி அடைந்த படோசா முதுகுவலி காரணமாக அதன் பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.