அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்கி செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது.;

Update:2025-08-24 07:29 IST

நியூயார்க்,

ஆண்டுதோறும், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 145-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.785 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும். இதில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர் ரூ.43½ கோடியை பரிசாக அள்ளலாம். மற்ற மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை விட இந்த தொகை அதிகமாகும். கடந்த ஆண்டை விட ரூ.12 கோடி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 2-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.21¾ கோடி கிடைக்கும். ஒற்றையர் முதல் சுற்றில் கால் பதித்தாலே ரூ.96 லட்சத்தை பெற முடியும். இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.8¾ கோடி பரிசாக கிட்டும்.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. முதல் நாளில் ஜோகோவிச், பென் ஷெல்டன், டெய்லர் பிரிட்ஸ், மெட்விடேவ், அரினா சபலென்கா, ஜெசிகா பெகுலா, எம்மா ரடுகானு, ஆஸ்டாபென்கோ உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் ஆடுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்