அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காஸ்பர் ரூட் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது;

Update:2025-08-26 16:01 IST

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் காஸ்பர் ரூட் (நார்வே) - செபாஸ்டியன் ஆப்னர் (ஆஸ்திரியா ) உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய காஸ்பர் ரூட் 6-1,6-2, 7(7)-6(5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் பெல்ஜியம் வீரர் ரபேல் காலிகனை, காஸ்பர் ரூட் எதிர்கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்