அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்

அரையிறுதியில் ஜோகோவிச் - அல்காரஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.;

Update:2025-09-04 06:56 IST

image courtesy:twitter/@usopen

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

இதில் முதல் 2 செட்டுகளை ஜோகோவிச் கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 4-வது செட்டை ஜோகோவிச் கைப்பற்றி வெற்றி பெற்றார். 3 மணி நேரம் 34 நிமிசம் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3,7-5, 3-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

அரையிறுதில் அல்காரஸ் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்