அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.;
நியூயார்க்,
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் டேனியல் ஆல்ட்மயர் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய டேனியல் ஆல்ட்மயர் 7(7)-6(5), 1-6, 4-6 , 6-3, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். சிட்சிபாஸ் 2வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.