அமெரிக்க ஓபன்: 5 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்கும் வீனஸ் வில்லியம்ஸ்

இதில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.;

Update:2026-01-03 14:22 IST

வாஷிங்டன்,

டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் வரும் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை மெல்போர்ன் நடக்க உள்ளது.

இந்த தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ், வீல்சேர் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், 7 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையுமான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கிறார். இதில் வைல்டுகார்டு சலுகை மூலம் பிரதான சுற்றில் அடியெடுத்து வைக்கும் 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ் இந்த போட்டியில் ஆடும் அதிக வயது வீராங்கனை என்ற சிறப்பை பெறுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்