வியன்னா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னெர்
இத்தாலியின் ஜானிக் சின்னெர் - ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரெவ் உடன் மோதினார்.;
Image Courtesy: @ErsteBankOpen
வியன்னா,
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னெர் - ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரெவ் உடன் மோதினார்.
இந்த மோதலின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்வேரெவ் கைப்பற்றினார். இதையடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்வேரெவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.