வியன்னா ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
வியன்னா,
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - சுவீடனின் ஆண்ட்ரியா கோரெசன் ஜோடி, குரோஷியாவின் மேட் பாவிக் - சால்வடாரின் மார்செலோ ஜோடி உடன் மோதியது.
இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (8-6) என்ர புள்ளிக்கணக்கில் மேட் பாவிக் ஜோடியும், 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் யூகி பாம்ப்ரி ஜோடியும் கைப்பற்றியது.
தொடர்ந்து 3வது செட் தொடங்கும் முன்னரே மேட் பாவிக் ஜோடி காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியது. இதன் காரணமாக யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.