வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அன்னா கலின்ஸ்கயா
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.;
கோப்புப்படம்
வாஷிங்டன்,
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனைகளான அன்னா கலின்ஸ்கயா (ரஷியா) - ஏம்மா ராடுகானு (பிரிட்டன்) ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய அன்னா கலின்ஸ்கயா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஏம்மா ராடுகானுவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிஆட்டத்தில் அன்னா கலின்ஸ்கயா, கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதுகிறார்.