வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: பென் ஷெல்டன் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-07-23 22:00 IST

கோப்புப்படம்

வாஷிங்டன்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னணி வீரரான பென் ஷெல்டன் (அமெரிக்கா), சக நாட்டு வீரரான மெக்கன்சி மெக்டொனால்ட் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய பென் ஷெல்டன் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மெக்கன்சி மெக்டொனால்டை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்