வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கனடா வீராங்கனை
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.;
Image Courtesy: @mubadalacitidc
வாஷிங்டன்,
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லேலா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டி 70 நிமிடங்கள் நடைபெற்றது.நடப்பு தொடரில் முன்னணி வீராங்கனைகளான ஜெசிகா பெகுலா, எலினா ரைபகினா ஆகியோரை லேலா பெர்னாண்டஸ் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.