வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: டேனியல் காலின்ஸ் அதிர்ச்சி தோல்வி

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-07-22 13:30 IST

கோப்புப்படம்

வாஷிங்டன்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ், போலந்தின் மாக்டா லினெட் உடன் மோதினார்.

இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட டேனியல் காலின்ஸ் 5-7, 4-6 என்ற செட் கணக்கில் மாக்டா லினெட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்