வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: டேவிடோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.;
image courtesy:twitter/@mubadalacitidc
வாஷிங்டன்,
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான பென் ஷல்டன் (அமெரிக்கா), ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் போகினா உடன் மோதினார்.
இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அபாரமாக செயல்பட்ட டேவிடோவிச் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.