வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: மரிய சக்காரி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மரிய சக்காரி 2-வது சுற்று ஆட்டத்தில் எம்மா நவரோ உடன் மோத உள்ளார்.;

Update:2025-07-22 10:55 IST

image courtesy:instagram/mariasakkari

வாஷிங்டன்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் மரிய சக்காரி (கிரீஸ்), கேட்டி போல்டர் (இங்கிலாந்து) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட சக்காரி 6-3 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் 2-வது சுற்றில் எம்மா நவரோ (அமெரிக்கா) உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்