வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.;
கோப்புப்படம்
வாஷிங்டன்,
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, நெதர்லாந்தின் செம் வெர்பீக் - ஸ்வீடனின் கோரன்சன் ஜோடி உடன் மோதியது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 7-6 (7-1) என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 10-6 என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.