விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் அல்காரஸ் - சினெர் இன்று மோதல்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அல்காரஸ் - சினெர் இன்று மோத உள்ளனர்.;

Update:2025-07-13 10:00 IST

image courtesy:twitter/@Wimbledon

லண்டன்,

லண்டன், 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்னும் இரண்டு ஆட்டங்களே எஞ்சி உள்ளன.

அதில் ஒன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் முன்னணி வீரர்களான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோத உள்ளனர்.

சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவரும் கடுமையாக போராடுவர் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்