விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இங்கிலாந்து ஜோடி சாம்பியன்

நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.;

Update:2025-07-12 19:47 IST

image courtesy:twitter/@Wimbledon

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து ஜோடியான லாயிட் கிளாஸ்பூல் - ஜூலியன் கேஷ், ரிங்கி ஹிஜிகாடா (ஆஸ்திரேலியா) - டேவிட் பெல் (நெதர்லாந்து) இணையுடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து ஜோடி 6-2 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்