விம்பிள்டன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.;

Update:2025-07-05 11:00 IST

image courtesy:PTI

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி - சீனாவின் ஜியாங் ஜின் யு ஜோடி, அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் - நிகோல் மார்டினஸ் ஜோடி உடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய யுகி பாம்ப்ரி ஜோடி 6-3, 1-6, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் - நிகோல் மார்டினஸ் ஜோடியை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

மேலும் செய்திகள்