பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி
டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.;
image courtesy; AFP / JESSICA PEGULA .
ரியாத்,
உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா பெகுலா, செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெசிகா பெகுலா 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.