பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்

அரினா சபலென்கா, கோகோ காப்பை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.;

Update:2025-11-07 05:30 IST

ரியாத்,

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘ஸ்டெபிகிராப்’ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) , கோகோ காப்பை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தி அரினா சபலென்கா )7-6 (7-5), 6-2 என்ற நேர் செட்டில் கோகோ காப்பை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியோடு அரையிறுதிக்குள் கால்பதித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்