வுஹான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கோகோ காப்

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கோகோ காப், சக நாட்டவரான ஜெசிகா பெகுலா உடன் மோத உள்ளார்.;

Update:2025-10-12 13:28 IST

image courtesy: twitter/@CincyTennis

பீஜிங்,

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனைகளான கோகோ காப் (அமெரிக்கா) - இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கோகோ காப், சக நாட்டவரான ஜெசிகா பெகுலா உடன் மோத உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்