கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
x

வில்லியனூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வில்லியனூர்

வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் ஓதியம்பட்டு பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயவேல் (வயது 22), உத்தரவாகிணிபேட்டை சேர்ந்த சூர்யா (22) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story