மாணவியை அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது நடவடிக்கை


மாணவியை அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது நடவடிக்கை
x

காரைக்கால் அருகே சவ ஊர்வலத்தில் மாணவியை அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோட்டுச்சேரி

நெடுங்காட்டை அடுத்த நரிகரம்பை சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சைமன்ராஜ், இவர் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தனது மகள் காரைக்காலில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருவதாகவும், சம்பவத்தன்று பள்ளியில் இருந்து மகளை அழைத்துக்கொண்டு மாதா கோவில் வீதியில் வந்தபோது, எதிர்புறமாக சவ ஊர்வலத்தில் வந்த சிலர் பட்டாசு வெடித்தனர். இதனால் பயந்துபோன மகள், அங்கும் இங்கும் ஓடியபோதும் தொடர்ந்து பட்டாசு வெடித்து, அவளை அச்சுறுத்தினர்.

இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story