'ஒரே கட்டமாக ஒரே தேர்தல்' என்பதை நாம் முயற்சிக்கலாமே? - கமல்ஹாசன்


ஒரே கட்டமாக ஒரே தேர்தல் என்பதை நாம் முயற்சிக்கலாமே? - கமல்ஹாசன்
x

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

"ஒரே நாடு ஒரே தேர்தல்"-ஐ முயற்சிப்பதற்கு முன்னாள் குறைந்தபட்சம் "ஒரே கட்டமாக ஒரே தேர்தல்" என்பதை நாம் முயற்சிக்கலாமே?என்று கேள்வி எழுப்பியுள்ளார் .


Next Story