நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக பேச வேண்டுமென்றால் தனித்து போட்டியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
எங்களுக்கு ஆட்சி, அதிகாரம் தேவையில்லை, மக்கள்தான் தேவை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
சேலம் மாவட்டம் மேச்சேரியில் தருமபுரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அசோகனை ஆதரித்து, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
எங்களுக்கு ஆட்சி, அதிகாரம் தேவையில்லை, மக்கள் தான் தேவை. நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக பேச வேண்டுமென்றால் தனித்து போட்டியிட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணை வெளியிட்டேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அ.தி.மு.க. ஆட்சி மாற்றத்தால் எதையும் செய்ய முடியவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்தவர்களுடனே பா.ம.க. தற்போது கூட்டணி வைத்துள்ளது. அ.தி.மு.க.வை பற்றி விமர்சனம் செய்வதற்கு பா.ம.வு.க்கு எந்த தகுதியும் இல்லை என்றார்.
Related Tags :
Next Story