பணப்பட்டுவாடா புகார்: சென்னையில் வருமானவரித்துறை அதிரடி சோதனை
பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக சென்னையில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஓட்டேரி உள்பட 5 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சி நடப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story