காஞ்சிபுரம் பா.ம.க. வேட்பாளர் அறிவிப்பு


காஞ்சிபுரம் பா.ம.க. வேட்பாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 March 2024 2:58 PM GMT (Updated: 22 March 2024 3:12 PM GMT)

பா.ஜ.க. கூட்டணியில் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது பா.ம.க.

சென்னை,

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே (ஏப்ரல் 19-ந்தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

இதில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இந்தநிலையில், மீதி 1 தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் தொகுதியில் பா.ம.க . சார்பில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

பா.ஜ.க. கூட்டணியில் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை பா.ம.க. அறிவித்தது.

வேட்பாளர்கள் விவரம்:-

1. திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா, பி.காம் மாநிலப் பொருளாளர், பா.ம.க.

2. அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல் செய்தித் தொடர்பாளர், பா.ம.க. தலைவர், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை

3 ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், பி.இ., பி.எச்டி., முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்டச் செயலாளர், பா.ம.க. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,

4. கடலூர் - தங்கர் பச்சான், டி.எப்.டெக், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்,

5. மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி., மாவட்டச் செயலாளர், பா.ம.க. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

6. கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்., நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர், மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க.

7. தர்மபுரி - பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர், முனைவர் சவுமியா அன்புமணி

8. சேலம் - ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்., முன்னாள் மாவட்டச் செயலாளர், பா.ம.க. சேலம் தெற்கு மாவட்டம்

9. விழுப்புரம் - முரளி சங்கர், பி.காம்., மாநில செயலாளர், பா.ம.க. மாணவர் அணி

10) காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ்


Next Story