டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்


டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்
x

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், தி.மு.க. கூட்டணி சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் டீ போட்டுக் கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.


Next Story