மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர் - அன்புமணி ராமதாஸ் பேச்சு
விக்கிரவாண்டியில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்
சென்னை,
விழுப்புரம் மாவட்டத்தில், விக்கிரவாண்டியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், விழுப்புரம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதிரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,
தி.மு.க., அ.தி.மு.க. வேண்டாம். மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர்.தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சி வேண்டாம். ஆண்ட கட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.ரவிக்குமார் எம்.பி., தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் ? ரவிக்குமார் தொகுதிக்கு எதுவும் செய்யாமல் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்.பா.ம.க வேட்பாளர் முரளி சங்கரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. என இருவரும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். கல்வி, வேலை வாய்ப்பிற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார். தேர்தல் வந்தால் தான் தி.மு.க.விற்கு மக்கள் நியாபகம் வருகிறது. தி.மு.க.வில், வி.சி.க.வுக்கு பொது தொகுதி கொடுக்காதது ஏன் ?சமூக நீதி வழங்கி கொண்டிருக்கும் ஒரே கட்சி பா.ம.க. இவ்வாறு அவர் கூறினார்.