அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - எடப்பாடி பழனிசாமி பேச்சு


அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 14 April 2024 12:51 PM GMT (Updated: 14 April 2024 12:51 PM GMT)

நீட் தேர்வு விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

பிராசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் பிரசார கூட்டம், அதிமுக மாநில மாநாடுபோல் காட்சியளிக்கிறது. அதிமுகவை விமர்சிக்கிறவர்கள், இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள். அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அதிமுகவை அழிக்க இந்த பூமியில் யாரும் இன்னும் பிறக்கவில்லை. மக்கள் செல்வாக்கு, தெய்வ சக்தி படைத்த கட்சி அதிமுக. பொய் வழக்குகள் போட்டு கட்சி பணியை முடக்க பார்க்கிறார்கள்.

திமுக ஆட்சியில்தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. மின் கட்டணத்தை குறைக்ககோரி போராடிய விவசாயிகளை சுட்டு வீழ்த்தியது திமுக. திமுக ஆட்சியில் பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றன. அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, விரும்பத்தகாத சம்பவத்தை உருவாக்கியது திமுக. விவசாயிகளுக்கான திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் முதல்-அமைச்சர் பொய் பிரசாரம் செய்கிறார். காங்கிரசும், திமுகவும்தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது; அதனால்தான் திரும்ப திரும்ப பொய்யை பேசி உண்மையாக மாற்ற முயற்சிக்கிறார். தமிழகத்தில் 4 முதல்-அமைச்சர்கள் ஆட்சி செய்கின்றனர்.

அதிமுக ஆட்சியில்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக. மதுரை எய்ம்ஸ் குறித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கவில்லை. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முடக்கப்பட்ட திட்டங்கள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story