நேர்மையான அரசியல் மாற்றம் ஏற்பட தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் - அண்ணாமலை வேண்டுகோள்


நேர்மையான அரசியல் மாற்றம் ஏற்பட தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் - அண்ணாமலை வேண்டுகோள்
x

தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.

சென்னை,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.முதல் கட்டமாக தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், நேர்மையான அரசியல் மாற்றம் ஏற்பட தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை தொகுதி பா.ஜ.க . வேட்பாளருமான அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகிட, இளைஞர்களுக்கான அரசியல் பிறந்திட, அனைவருக்கும் சமவாய்ப்புகள் மலர்ந்திட, கொங்கு மண்ணின் பெருமை நாடு முழுவதும் அறியப்பட, வளர்ச்சிப் பாதையில் கோவை மீண்டும் பயணிக்க, கோவை நாடாளுமன்ற வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.


Next Story